கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கிடைத்த நவீன பேருந்துகள்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து விமானத்திற்கு பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக சிறிலங்கன் விமான சேவையின் தரைக்கட்டுப்பாட்டு பிரிவுக்கு மூன்று அதிநவீன பேருந்துகளை கையளிக்கும் நிகழ்வு நேற்று (10) சிறிலங்கன் விமான சேவை நிறுவன வளாகத்தில் இடம்பெற்றது.
சுமார் 05 வருடங்களாக பாரிய தேவையாக இருந்த பேருந்துகள் நேற்று (10) முதல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
சீனாவில் தயாரிக்கப்பட்டவை
14 மீற்றர் நீளமும் 2.7 மீற்றர் அகலமும் கொண்ட இப்பேருந்துகள் கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் அதன் விமானப் பயணிகள் சேவை மற்றும் குடிவரவு சேவை ஆகியவற்றின் தேவைகளுக்கு ஏற்ப சீனாவில் உள்ள சைனா இன்டர்நஷனல் மரைன் கொள்கலன் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளன.
இந்த பேருந்துகளில் எயார் கண்டிஷனிங் முறைமைக்கென தனி எஞ்சினும் உள்ளது. 77 பயணிகள் பயணம் செய்யும் வசதி கொண்ட இந்த பேருந்துகளில் ஓட்டுநர் மற்றும் அதில் பயணிக்கும் பயணிகளுக்கு தகவல் தொடர்பு வசதி உள்ளது.
அதுமட்டுமின்றி, மாற்றுத்திறனாளிகள் பேருந்தில் செல்ல சக்கர நாற்காலிகளும் வழங்கப்பட்டுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |