கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி விற்பனை...! 3 வர்த்தகர்களுக்கு நீதிமன்றின் அதிரடி உத்தரவு
கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த ஜா-எல மற்றும் கந்தானை பகுதிகளைச் சேர்ந்த மூன்று வர்த்தகர்களுக்கு வெலிசறை நீதவான் நீதிமன்றம் தலா ஒரு இலட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
நுகர்வோர் விவகார அதிகார சபையினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் வர்த்தகர்கள் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து இந்த மூன்று இலட்சம் ரூபாய் அபராத உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
குறித்த வர்த்தகர்கள் ஒரு கிலோ அரிசியை 308, 275 மற்றும் 280 ரூபாய் ஆகிய விலைகளில் விற்பனை செய்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.
கட்டுப்பாட்டு விலை
அரசாங்கம் நிர்ணயித்த கட்டுப்பாட்டு விலையை மீறி நுகர்வோரை ஏமாற்றும் வகையில் செயற்பட்டமைக்காக இந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட இந்த அபராதத் தொகையினை வர்த்தகர்கள் மூவரும் செலுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |