முச்சக்கரவண்டி சாரதியின் தூக்கத்தால் இறுதி ஊர்வலத்தில் நிகழ்ந்த அனர்த்தம்
Hospitals in Sri Lanka
Accident
By Sumithiran
இறுதி ஊர்வலத்தின் மீது முச்சக்கர வண்டி மோதியதில் மூன்று குழந்தைகள் உட்பட 7 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் பொத்துப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்ட நிலையில் அவர்கள், களுத்துறை பொது வைத்தியசாலையிலும், பாணந்துறை ஆதார வைத்தியசாலையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உறங்கிய முச்சக்கரவண்டி சாரதி

காலி வீதியில் வாத்துவ, பொதுப்பிட்டிய பிரதேசத்தில் இருந்து வஸ்கடுவ மயானத்தை நோக்கி சென்ற இறுதி ஊர்வலத்தின் மீது முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
முச்சக்கரவண்டியின் சாரதி உறங்கிய நிலையில் வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்தமையே விபத்துக்கான காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.