235 அடி பள்ளத்தில் கவிழ்ந்து நொறுங்கிய வாகனம்
அதிவேகமாக பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று பிரதான வீதியை விட்டு விலகி செங்குத்தான சரிவில் 235 அடி பள்ளத்தில் விழுந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா கிளாரண்டன் பகுதியில் நேற்று (02) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நானுஓயா காவல்துறையினர் கூறுகையில்,
விசாரணை
நுவரெலியா கந்தப்பளை பகுதியிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி வேகக்கட்டுப்பாட்டை இழந்து சுமார் 235 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.

இதில் முச்சக்கர வண்டியின் சாரதி படுகாயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் குறித்த விபத்தில் முச்சக்கர வண்டி கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விபத்து சம்பவம் குறித்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |