புத்தாண்டு தினத்தில் மற்றுமொரு சோகம் - எரிந்து கருகிய முச்சக்கரவண்டி(படம்)
fire
newyear
three-wheeler
By Sumithiran
வெல்லவாய பொது விளையாட்டரங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியொன்று தீக்கிரையாகியுள்ளது.
குறித்த முச்சக்கர வண்டி நேற்று (ஜன. 1) நண்பகல் 12.15 மணியளவில் தீப்பிடித்துள்ளது. அப்பகுதியில் திரண்ட மக்கள் தண்ணீர் மற்றும் மணலைக் கொண்டு தீயை அணைக்க முயன்றும் அது தோல்வியில் முடிந்துள்ளது.
வெல்லவாய பிரதேச சபைக்கு சொந்தமான தண்ணீர் பவுசரை பயன்படுத்தி தீயை அணைத்ததாகவும், ஆனால் முச்சக்கர வண்டி முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாகவும் முச்சக்கரவண்டியின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
வெல்லவாய காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி