கட்சிப் பதவிகளைத் துறந்த ரவிகரன் எம்.பி.
By Thulsi
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் (T. Raviharan) கட்சிப் பதவிகளிலிருந்து விலகியுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள உள்ளூர் அதிகார சபைகளுக்கான இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் (ITAK) தவிசாளர் தெரிவுகளில் ஏற்பட்ட அதிருப்தியால் அவர் பதவி விலகியதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்த வகையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் முல்லைத்தீவு மாவட்டக் கிளைச் செயலாளர் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேசக் கிளைத் தலைவர் ஆகிய பதவிகளிலிருந்தே ரவிகரன் பதவி விலகியுள்ளார்.
கடிதத்தின் மூலம் அறிவிப்பு
அதேவேளை ரவிகரன், தாம் கட்சிப் பதவிகளிலிருந்து விலகும் இந்த முடிவை கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், கட்சியின் நிர்வாகச் செயலாளர் சேவியர் குலநாயகம் ஆகியோருக்கு நேற்று கடிதத்தின் மூலம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்