துசித ஹல்லொலுவவிற்கு விளக்கமறியல்: நீதிமன்றம் விடுத்த உத்தரவு
தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவ அரச சொத்துக்களை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் ஜூன் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று(30) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தேசிய லொத்தர் சபையின் பிரதி பணிப்பாளராக இருந்த காலத்தில் ரூ.470,000 க்கும் அதிகமான மதிப்புள்ள கணினி மற்றும் தொலைபேசிகளை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் ஹல்லோலுவ முன்னதாக கைது செய்யப்பட்டு மே 02 ஆம் திகதி பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
காவல்துறை விசாரணை
இருப்பினும், அதே வழக்கில் அவர் இன்று விளக்கமறியலில் வைக்கப்பட்டாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
இதற்கிடையில், இந்த மாதம் நாரஹேன்பிட்ட பகுதியில் துசித ஹல்லொலுவ மற்றும் அவரது வழக்கறிஞரை குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பாகவும் காவல்துறையினர் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இதன்படி, சம்பவம் தொடர்பாக இதுவரை ஆறு பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
