யாழ். திரும்பிய 71 வயதுடைய அகதி கைது : ஆத்திரத்தில் சுமந்திரன்

CID - Sri Lanka Police Jaffna M A Sumanthiran Sri Lanka Law and Order
By Raghav May 30, 2025 01:30 PM GMT
Report

இந்திய அகதி முகாமில் பல தசாப்தங்களாக தஞ்சமடைந்திருந்து நாடு திரும்பிய 71 வயது முதியவரை குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 

குறித்த கைது நடவடிக்கை நேற்றைய தினம் (29.05.2025) யாழ்.பலாலியில் வைத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கைது செய்யப்பட்ட முதியவர் இந்திய அகதி முகாமில் பல தசாப்தங்களாக தஞ்சமடைந்திருந்துள்ளார்.

கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் : வெலிக்கடை சிறையில்...

கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் : வெலிக்கடை சிறையில்...

பலாலி விமான நிலையம்

பின்னர் நாடு திரும்பிய போது நேற்றைய தினம் யாழ்ப்பாணம் - பலாலி விமான நிலையத்தில் அவர் கைது செய்யப்பட்டார்.

யாழ். திரும்பிய 71 வயதுடைய அகதி கைது : ஆத்திரத்தில் சுமந்திரன் | Returnee Arrested By The Cid Sri Lanka

இவ்வாறு கைது செய்யப்பட்ட முதியவர் இன்று (30.05.2025) மல்லாகம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு ஜூன் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த முதியவரிடம் நாடு திரும்புவதற்குத் தேவையான அனைத்து ஆவணங்கள் இருந்தும், சர்வதேச சட்டப்படி அவர் ஒரு அகதி என்று உறுதிப்படுத்தப்பட்ட பின்னரும் அவரை பிணையில் விடுவிக்க எதிர்ப்புத் தெரிவித்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் அவசியத்தை வலியுறுத்திய அரசாங்கம்

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் அவசியத்தை வலியுறுத்திய அரசாங்கம்

இலங்கை தமிழரசுக் கட்சி

இந்நிலையில், இச்சம்பவமானது நாடு திரும்புவதற்கு தயாராக இருக்கும் 10 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள், நாட்டிற்கு பயந்து வராமல் இருப்பதற்காக செய்யப்பட்ட ஏற்பாடுகளா? என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான எம்.ஏ.சுமந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார்.

யாழ். திரும்பிய 71 வயதுடைய அகதி கைது : ஆத்திரத்தில் சுமந்திரன் | Returnee Arrested By The Cid Sri Lanka

X தளத்தில் பதிவு ஒன்றை வைத்தே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “எனது சேவை பெறுநரின் அனுமதியோடு இந்தப் பதிவை செய்கிறேன்.

இந்தியாவில் அகதி முகாமில் பல தசாப்தங்களாக தஞ்சமடைந்திருந்து நேற்று பலாலியை வந்தடைந்த 75 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டு இன்று குற்றப் புலனாய்வுத் துறையினரால் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்.

நாடு திரும்புவதற்குத் சர்வதேச சட்டப்படி அவர் ஒரு “அகதி” என்ற பின்னரும் அவரை பிணையில் விடுவிக்க எதிர்த்த காரணத்தினால் ஜூன் 5ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

நாடு திரும்புவதற்கு தாயாராக இருக்கும் 10 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் பயந்து வராமல் செய்வதற்கான ஏற்பாடா இது” என தெரிவித்துள்ளார். 

சிறை செல்லப் போகும் முக்கிய புள்ளிகளின் அடுத்த பட்டியல்: அரசாங்க தரப்பிலிருந்து தகவல்

சிறை செல்லப் போகும் முக்கிய புள்ளிகளின் அடுத்த பட்டியல்: அரசாங்க தரப்பிலிருந்து தகவல்

பிரபாகரன் - பொட்டு அம்மானை மீட்க கப்பல் அனுப்பிய அமெரிக்கா - விமல் வீரவன்ச

பிரபாகரன் - பொட்டு அம்மானை மீட்க கப்பல் அனுப்பிய அமெரிக்கா - விமல் வீரவன்ச

சிறுவனிடம் இலஞ்சம் பெற்ற அதிகாரிக்கு நேர்ந்த கதி

சிறுவனிடம் இலஞ்சம் பெற்ற அதிகாரிக்கு நேர்ந்த கதி

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்