முன்னாள் அமைச்சர் கெஹலிய உட்பட ஒன்பது பேருக்கு இறுகும் பிடி
நோயாளிகளுக்கு தரமற்ற மருந்துகளை வழங்கி பல கோடி ரூபா வருமானம் ஈட்டியதாக குற்றம் சுமத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல(keheliya rambukwella) உட்பட சுகாதார அமைச்சின் ஒன்பது அதிகாரிகளின் சொத்துக்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இதன்படி, முன்னாள் சுகாதார அமைச்சர் மற்றும் அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் வங்கிக் கணக்குகள், சொத்துக்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஆரம்பமானது விசாரணை
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைப் பிரிவினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வருமானம் மற்றும் வங்கி கணக்குகள்
மருந்துப்பொருள் மோசடி இடம்பெற்ற காலப்பகுதியில் முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட 8 அதிகாரிகளின் வருமானம் மற்றும் வங்கி கணக்குகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படவுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |