ரில்வின் சில்வாவை சந்தித்தார் இந்திய உயர் ஸ்தானிகர்
Colombo
Janatha Vimukthi Peramuna
Tilvin silva
By Jaso
ஜனதா விமுக்தி பெரமுனவின் பொதுச் செயலாளர்ரில்வின் சில்வா மற்றும் இலங்கைக்கான இந்திய உயர் ஆணையர் சந்தோஷ் ஜா ஆகியோருக்கு இடையேயான சந்திப்பு, பெலவத்தையில் உள்ள ஜனதா விமுக்தி பெரமுனவின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையேயான தூதரக மற்றும் கலாசார உறவுகளில் ஏற்பட்டுள்ள சமீபத்திய முன்னேற்றங்கள், இந்தியாவில் நிலவும் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் இலங்கையின் அரசியல் கலாசாரத்தில் ஏற்பட்டுள்ள நேர்மறையான மாற்றங்கள் குறித்து இச்சந்திப்பில் விவாதிக்கப்பட்டது.
சந்திப்பில் கலந்துகொண்டவர்கள்
இந்திய உயர் ஆணையத்தின் அரசியல் திணைக்களத்தின் முதல் செயலாளர் ராம்பாபு செல்லப்பா மற்றும் வெளிநாட்டு விவகாரங்கள் திணைக்களத்தின் இணைத் துணைத் தலைவர் கல்பனா மதுபாஷினி ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

வடக்கு மாகாணத்தில் 80 உத்தியோகத்தர்களை பணிநீக்கம் செய்யச் சதி - உயர் அதிகாரிகள் மீது கடும் விமர்சனம்!
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
3ம் ஆண்டு நினைவஞ்சலி