பருவ மாற்றத்திற்கேற்ப கனடாவில் அறிமுகமாகும் நேர மாற்றம்
Canada
World
By Beulah
ஆண்டுதோறும் பருவ மாற்றத்திற்கு ஏற்ற வகையில் கனடாவில் நேர மாற்றம் நடைமுறைப்படுத்தப்படுவது வழமையானதாகும்.
அவ்வகையில், எதிர்வரும் 5ம் திகதி இந்த நேர மாற்றம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இதன்படி, 5ம் திகதி அதிகாலை இரண்டு மணிக்கு ஒரு மணித்தியாலம் பின்நோக்கி நகர்த்தப்படவுள்ளது.
பருவ மாற்றம்
கடந்த மார்ச் மாதம் பருவ மாற்றம் காரணமாக ஒரு மணித்தியாலம் முன்நோக்கி நகர்த்தப்பட்டது.

இந்த நேர மாற்றம் எமது அன்றாட நடவடிக்கைகளில் சிறு சிறு பாதிப்புக்களை ஏற்படுத்தக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக நித்திரையில் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும் ஒரு மணித்தியால நேர மாற்றமானது பாரியளவில் உடலியல் தாக்கத்தை ஏற்படுத்தாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
முகமாலை நவீன போரியல் விதிகளை மாற்றியமைத்த ஈழத்து ஸ்டாலின்கிராட் 6 மணி நேரம் முன்
பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம்
15 மணி நேரம் முன்
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி