இலங்கையில் கட்டாயமாக்கப்படும் TIN இலக்கம் : மக்களுக்கு வெளியான அறிவிப்பு

Sri Lankan Peoples Inland Revenue Department TIN Number
By Sathangani Jun 12, 2026 11:09 AM GMT
Report

2026 ஆம் ஆண்டு 11 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரி (திருத்தப்பட்ட) சட்டத்தின் கீழ், நாட்டின் வரி நிர்வாகத்தை வலுப்படுத்துவதற்கும் வரி செலுத்துவோரின் இணக்கத்தன்மையை மேம்படுத்துவதற்குமான பல புதிய திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, வங்கி கணக்குகளை ஆரம்பித்தல், மோட்டார் வாகனப் பதிவு மற்றும் புதுப்பித்தல், வணிகப் பதிவு, நிறுவனப் பங்குகளைப் பரிமாற்றுதல் மற்றும் கடன் அட்டைகளைப் பெற்றுக்கொள்ளுதல் போன்ற பல்வேறு முக்கிய பரிவர்த்தனைகளுக்கு இனி வரி செலுத்துவோர் அடையாள எண் (TIN) சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இதன்படி,2026 ஜூன் 3 ஆம் திகதி முதல் இந்தச் சட்டம் உத்தியோகபூர்வமாக நடைமுறைக்கு வந்துள்ள நிலையில் குறிப்பிட்ட சில மோட்டார் வாகனங்களை விற்பனை செய்வதன் மூலம் பெறப்படும் இலாபம், இனிமேல் வரி விதிக்கப்படக்கூடிய வருமானமாகக் கருதப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

சொல்லிசை பாடகர் சங்கீத்சனுக்கு பிணை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சொல்லிசை பாடகர் சங்கீத்சனுக்கு பிணை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு

 உள்நாட்டு இறைவரித் திணைக்களம்

தனிநபர்கள் மற்றும் கூட்டுப்பங்கான்மைகளுக்கான மூலதன இலாப வரி 15 சதவீதமாகவும்; அறக்கட்டளைகள், பரஸ்பர நிதியங்கள் (Mutual funds) மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான வரி 30 சதவீதமாகவும் திருத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் கட்டாயமாக்கப்படும் TIN இலக்கம் : மக்களுக்கு வெளியான அறிவிப்பு | Tin Must Be Submitted For Major Transactions

மாதத்திற்கு 100,000 ரூபாவிற்கு மேற்பட்ட சேவைக் கொடுப்பனவுகளுக்கான 5 சதவீதம் தடுத்து வைக்கப்படும் வரியின் வரம்பு மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இதன்படி தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள், சமூக ஊடக நிபுணர்கள், கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், ஒளிப்பதிவாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் ஆகியோரும் இனி இந்த வரி வரம்பிற்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

வரி செலுத்துவோர் இனி மதிப்பீட்டு வரி அறிக்கைகளை (SET) சமர்ப்பிக்க வேண்டிய தேவை இல்லை. அவற்றுக்குப் பதிலாக, காலாண்டு வரி தவணைக்கட்டணங்கள் அதற்கு முந்தைய ஆண்டின் வரிப் பொறுப்பின் அடிப்படையில் கணக்கிடப்படும்.

வலி. வடக்கு காணி விடுவிப்பு கோரி யாழில் தொடர் போராட்டம்!

வலி. வடக்கு காணி விடுவிப்பு கோரி யாழில் தொடர் போராட்டம்!

ஆயுள் காப்புறுதி 

குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு, ஆயுள் காப்புறுதி முதிர்வு, கொள்கை ஒப்படைப்பு (Surrender) அல்லது காப்புறுதிதாரரின் மரணத்தின் போது பெறப்படும் தொகைகளுக்கு வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கட்டாயமாக்கப்படும் TIN இலக்கம் : மக்களுக்கு வெளியான அறிவிப்பு | Tin Must Be Submitted For Major Transactions

இதேவேளை 2024/25 வரி ஆண்டு வரையிலான தாமதக் கொடுப்பனவுகள் மற்றும் குறைவான வரிச் செலுத்தல்களுக்கான வட்டித் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

எனினும், நிலுவையிலுள்ள அசல் வரித்தொகை 2026 டிசம்பர் 2 ஆம் திகதிக்கு முன்னர் முழுமையாகச் செலுத்தப்பட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

பாடகர் சங்கீத்சனை விடுவிக்க கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

பாடகர் சங்கீத்சனை விடுவிக்க கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி