அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில் இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்த கூட்டமைப்பு!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில், இந்திய உயர்ஸ்தானிகருடன் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பு நேற்று கொழும்பில் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையில் கொழும்பில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பின் போது, அரசியல், அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு முக்கியத்துவமிக்க விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாகக் குறிப்பிடப்படுகின்றது.
அதேவேளை இந்திய மத்திய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் வடக்கு, கிழக்கு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில், உயர்ஸ்தானிகர் கவனம் செலுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சந்திப்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரன், சித்தார்த்தன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.