கூட்டமைப்பின் குற்றச்சாட்டை அடியோடு நிராகரித்தது சிறிலங்கா அரசு
அவசரகால சட்டத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் தவறாக பயன்படுத்தப்படலாம் என தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்வைத்த குற்றச்சாட்டை நிராகரித்துள்ள சிறிலங்கா அரசாங்கம், அவசரகால சட்டத்தை நியாயப்படுத்தி, நாடாளுமன்றில் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றியுமுள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற அத்தியாவசிய உணவுப்பொருட்களை விநியோகிப்பதகான அவசரகால ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, அத்தியாவசிய பொருட்களின் பதுக்கலை தடுப்பதற்காக அவசரகால சட்டத்தை பயன்படுத்துவது ஒருபோதும் ஜனநாயக விரோத செயற்பாடாகாது என சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது இடம்பெறுவது வியாபார மாபியா அல்ல, வியாபார பயங்கரவாதம். இதனை அவசரகால சட்டத்தின் மூலமாகவே தடுக்க முடியும். அதனையே ஜனாதிபதி மேற்கொண்டு வருகின்றார்.
எனவே அவசரகால நிலைமையை பிரகடனப்படுத்தியமை ஜனநாயக செயற்பாடாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.