தொடரும் சீரற்ற வானிலை: மக்களுக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோள்
மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்திலும் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அதேவேளை, நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வறண்ட காலநிலை நிலவும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேவேளை, மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படுமென்றும் திணைக்களம் அறிவித்துள்ளது.
முன்னெச்சரிக்கை
அத்துடன், நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக பாடசாலை மாணவர்களை வெளி நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், காலநிலை மாற்றங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களில் இருந்து மக்கள் முன்னெச்சரிக்கையாக செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |