கிளி. தருமபுரத்தில் முதியவர் சடலமாக மீட்பு
today
death
tharumapuram
By Vanan
கிளி. தருமபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட விசுவமடு குமாரசாமிபுரம் பகுதியில் இன்று முதியவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு நடுப்பகுதியில் கண்டாவளைப்பகுதியில் இடம்பெற்ற வீதிவிபத்தில் படுகாயமடைந்து, நோய்வாய்ப்பட்டு, தனிமையில் வசித்துவந்த அவர் - இன்றையதினம் 2.30 மணியளவில் கிணற்றில் சடலமாக இனங்காணப்பட்டுள்ளார் .
வேலாயுதம் பரமேஸ்வரி (வயது 74) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக தருமபுரம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்