தங்கம் வாங்க காத்திருப்போருக்கு முக்கிய தகவல்: விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்
தங்கத்தின் விலை உலக சந்தையில் நாளுக்கு நாள் ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.
இதனால் இன்று(7) இலங்கையிலும் தங்கத்தின் விலை சற்று குறைவடைந்துள்ளது.
முன்னைய தினங்களுடன் ஒப்பிடும் போதே தங்கத்தின் விலையில் சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இன்றைய தங்க நிலவரம்
இதன்படி, இலங்கையில் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 165,750 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இதேவேளை, 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 180,750 ரூபாவாக காணப்படுகிறது.
அந்த வகையில் 1 கிராம் 24 கரட் தங்கத்தின் விலையானது 22,600 ரூபாவாக உள்ளதுடன், 1 கிராம் 22 கரட் தங்கத்தின் விலையானது 20,720 ரூபாவாக உள்ளது.
கடந்த வார நிலவரம்
இதேவேளை, கடந்த வாரம் 22 கரட் தங்க பவுணொன்றின் விலை 166,550 ரூபாவாக பதிவாகியிருந்ததுடன் 24 கரட் தங்க பவுணொன்றின் விலை 181,650 ரூபாவாக காணப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இதனடிப்படையில் தங்கத்தின் விலையானது கடந்த வாரத்தை விட இவ்வாரம் சிறியளவு வீழ்ச்சியை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |