தங்க விலையில் தொடர் மாற்றம் : வாங்கவுள்ளோருக்கு முக்கிய தகவல்
இலங்கையில் (sri Lanka) தங்கத்தின் விலையானது கடந்த சில மாதங்களாக சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.
கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்த தங்க விலையானது மீணடும் படிப்படியாக அதிகரித்துச்செல்கின்றது.
இன்றைய (28.08.2024) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் (Gold Ounce) விலையானது 758,148 ரூபாவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இன்றைய நிலவரம்
24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 26,750 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 24 கரட் தங்கப் பவுண் 213,950 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 24,530 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 22 கரட் தங்கப் பவுண் ( 22 karat gold 8 grams) 196,200 ரூபாவாக பதிவாகியுள்ளது.
21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 23,410 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண்(21 karat gold 8 grams) 187,250 ரூபாவாக பதிவாகியுள்ளது.
செட்டியார் தெரு விபரங்கள்
அத்துடன், கொழும்பு செட்டியார் தெரு தங்க நிலவரங்களின் படி 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) ஒன்று 201,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேவேளை, அங்கு (22 karat gold 8 grams) ஒன்று 186,400 ரூபாவாக பதிவாகியுள்ளது. எனினும் தங்க ஆபரணங்களின் விலை இந்த விலைகளிலிருந்து மாற்றமடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |