இந்தியாவுடன் மோதப்போகும் பாகிஸ்தான்: ரசிகர்களுக்கு முக்கிய அறிவித்தல்
                                    
                    Cricket
                
                                                
                    Pakistan
                
                                                
                    India
                
                                                
                    Indian Cricket Team
                
                                                
                    2023 Asia Cup
                
                        
        
            
                
                By Shadhu Shanker
            
            
                
                
            
        
    இலங்கையில் 2023 ஆம் ஆண்டிற்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிகள் நடைப்பெற்று வருகின்ற நிலையில் தொடரினுடைய சுப்பர் 4 சுற்றின் 3 ஆவது போட்டி இடம்பெறவுள்ளது.
இன்றைய போட்டியில் இந்திய மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் மோதவுள்ளன.  
குறித்த போட்டி இன்று(10) கொழும்பு ஆர். பிரேதமதாச சர்வதேச விளையாட்டரங்கில் இன்று பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

ரிசர்வ் நாள்
ஏற்கனவே நடைப்பெற்ற இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதல் போட்டி மழையின் காரணமாக ரத்துச் செய்யப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

இன்று மோசமான காலநிலை காரணமாக போட்டி இடைநிறுத்தப்பட்டால் நாளையதினமும் போட்டி நடைப்பெறும் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், பார்வையாளர்கள் தங்களது டிக்கெட்டுகளை கவனமாக வைத்திருக்க அறிவுறுத்துபடுகிறார்கள்.
    
                                
            12ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்