இன்றைய நாடாளுமன்ற அமர்வு ஆரம்பம்
இன்றைய (23.01.2025) நாளுக்கான நாடாளுமன்ற அமர்வுகள் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது.
இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள அமர்வு மாலை 5.30 வரை நடைபெறவுள்ளதுடன் பல்வேறு விடயங்கள் விவாதிக்கப்படவுள்ளன.
அதன்படி காலை 09.30 முதல் 10.00 வரை நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 22 இன் (1) முதல் (6) வரையின் பிரகாரம் நாடாளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்படவுள்ளது.
இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு
காலை10.00 முதல் 11.00 வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் காலை 11.00 முதல் 11.30 வரை நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் காலை 11.30 முதல் மாலை 3.30 வரை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள், செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழ் அறிவித்தல், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள், துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழ் கட்டளை ஆகியன தொடர்பில் விவாதிக்கப்படவுள்ளது.
மேலும் மாலை 3.30 முதல் 5.30 வரை எதிர்க்கட்சியினால் பிரேரிக்கப்படவுள்ள ஒத்திவைப்பு விவாதம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
