இன்பக்கடலில் மூழ்கப்போகும் ராசியினர் இவர்கள் தானாம்..! தேடிவரும் அதிர்ஷ்ட யோகம் - இன்றைய ராசிபலன்
இன்றைய தினத்திற்கான சுருக்கம்
இன்று மங்கலகரமான சுபகிருது வருடம் ஆவணி மாதம் 28 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை ( 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13 ஆம் திகதி)
இன்றைய தினம் திதியாக, மாலை 01 மணி 40 நிமிடங்கள் வரை திர்தியை திதியும் அதனைத் தொடர்ந்து சதுர்த்தி திதியும் வருகிறது.
நட்சத்திரமாக, இன்று காலை 10 மணி 08 நிமிடங்கள் வரை ரேவதி நட்சத்திரமும் பின் அஷ்வினி நட்சத்திரமும் ஆரம்பமாகிறது.
இன்றைய தினத்திற்கான நல்ல / சுப நேரமானது காலை 07 .45 தொடக்கம் 08 .45 வரை காணப்படுவதுடன், மாலை 04 .45 தொடக்கம் 05 .45 வரை காணப்படுகிறது.
ஒவ்வொருவருடைய ராசிபலன்களினதும் சுருக்கம்
ராகு காலமானது 03.00 தொடக்கம் 04.30 மணி வரை காணப்படுகிறது. எம கண்டமானது 09 .00 மணி தொடக்கம் 10.30 மணி வரை காணப்படுகிறது.
இன்று உத்தர நட்சத்திரம் சந்திராஷ்டமத்திற்குரிய நட்சத்திரமாக குறிப்பிடப்பட்டிருப்பதனால், உத்தர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இறை பிரார்த்தனையுடன் நாளை நகரத்துவது நன்று.
மேலும் இன்று சங்கடஹர சதுர்த்தி தினமாகும்.
இன்று - மேஷத்திற்கு மகிழ்ச்சிக்குரிய நாளாகவும், ரிஷப ராசிக்காரர்கள் அன்பு செலுத்துபவர்களாகவும், மிதுன ராசியினருக்கு சாந்தமான நாளாகவும், கன்னிக்கு இன்பகர, சிறப்புவாய்ந்த நாளாகவும், மகர ராசியினருக்கு இன்பமான வெற்றி நிறைந்த நாளாகவும், கும்பத்திற்கு வெற்றி கிடைக்கும் நாளாகவும் அமையப்போகிறது.
