ஈரானுக்கு அடி! சாலேக்கு PTA கடி! விஜய்க்கு மணமுறிவு இடி!! எல்லாம் நியூற்றன் விதிகளா?
மத்திய கிழக்கில் இன்று ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து நடத்திய தாக்குதல் மூலம் போடப்பட்ட போர்ச்சுழிக்கும் சரி, சிறிலங்கா புலனாய்வுத்துறையின் முன்னாள் தலையான சுரேஸ் சாலேக்கு இன்று 3 மாதகால தடுப்புகாவல் நீடிக்கப்பட்ட நகர்வுக்கும் சரி, அதுவும் இல்லையென்றால் பாக்குநீரிணையின் அக்கரையில் தமிழக முதலமைச்சர் கனவுடன் அரசியல் செய்யும் தமிழக வெற்றிக்கழக கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் மீது அவரது மனைவி தாக்கல் செய்த மணமுறிவுவழக்காயினும் சரி எல்லாவற்றுக்கும் ஏறக்குறைய ஒரு விதிபொருந்தக்கூடும்.
அது தாக்கங்கள் மறுதாக்கங்கள் குறித்துக் கூறும் நியூட்டனின் 3 ஆம் விதியாக இருக்கக்கூடும். எல்லாத்தாக்கங்களுக்கு மறுதாக்கங்கள் இருக்கத்தான் செய்கின்றன போலும்
சிறிலங்காவின் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தனது பதவிக்காலத்தில் எத்தனையோ தமிழர்களை உள்ளே தூக்கிப்போட்ட அதே சாலே இப்போது அதே சட்டத்தில் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் சதியில் தனக்கு இருக்கக்கூடிய பங்கு குறித்த விசாரணைகளுக்காக 90 நாளுக்கு உள்ளே இருக்கப்போவது இன்று உறுதிப்படுத்தப்பட்டது.
சுரேஷ் சலேயால் திரட்டப்பட்ட துல்லியமான உளவுத்தகவல்களால் தான் தமிழர்களின் நடைமுறை அரசின் அரசியற்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனை கொல்லமுடிந்தது என தமிழ்மக்கள் மீதான போர் செய்தி டமாரங்களை அடித்து அரசியல் செய்யும் விமல் வீரவன்ச போன்றவர்கள் உசுப்பேற்றல்களை செய்தாலும் சுரேஸ் சாலே இன்னும் 3 மாதகாலத்துக்கு உள்ளே இருக்கக்கூடும்.
இதேபோல இலங்கை பூர்வீகத்தை கொண்ட விஜய்யின் மனைவி தனது திருமணபந்தத்தின் கால்நூற்றாண்டு கடந்த பின்னர் நீதிமன்றத்தில் மணமுறிவுகோரிய விடயமும் அதற்கு குறிப்பிடும் காரணங்களும் அரசியலில் குதித்துள்ள விஜய்க்கும் அவரது கட்சியான தமிழக வெற்றிக்கழகத்துக்கும் பெரும் சலாலாக மாறக்கூடிய நிலையில் இந்த விடயங்களை தாங்கிவருகிறது செய்திவீச்சு...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |