நாட்டில் மேலும் தொடரும் மழையுடனான வானிலை
Sri Lanka
Sri Lankan Peoples
Weather
By Dilakshan
நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை மேலும் சில நாட்களுக்கு தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று(19) பிற்பகல் 02.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புகள் காணப்படுவதாக கூறப்படுகிறது.
மேற்கு, வடமேல், தெற்கு, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.
முன்னெச்சரிக்கை
இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்