வட கிழக்கை உலுக்கிய வெள்ளம் - அதிகரிக்கும் பலி எண்ணிக்கை
புதிய இணைப்பு
நாட்டில் மழையினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சீரற்ற வானிலை காரணமாக 24 மாவட்டங்களில் 1,41,268 குடும்பங்களைச் சேர்ந்த 4,075,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
9,937 குடும்பங்களைச் சேர்ந்த 32,361 பேர் 366 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. 101 வீடுகள் முழுமையாகவும், 2,591 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
முதலாம் இணைப்பு
தென்கிழக்கு வங்காள விரிகுடா பகுதியில் ஏற்பட்ட ஆழ்ந்த தாழமுக்கம் காரணமாக, நிலவும் சீரற்ற காலநிலை நாளை முதல் படிப்படியாகக் குறைவடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (29.11.2024) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.
திருகோணமலைக்கு (Trinco) வடகிழக்கே சுமார் 110 கிலோமீற்றர் தொலைவில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த தாழமுக்கம் நாட்டின் கிழக்கு கடற்கரையை அண்மித்து வடமேற்கு நோக்கி நகர்ந்து செல்வதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதிகளவிலான பலத்த மழை
அதன்படி, மறு அறிவித்தல் நாட்டை சூழவுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் கடல்சார் மற்றும் மீனவ சமூகத்தை அறிவுறுத்தியுள்ளது.
இதேவேளை, வடக்கு மாகாணத்தின் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகளவிலான பலத்த மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடமத்திய, மேல், சப்ரகமுவ, வட மேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக் கூடும்.
வடக்கு, கிழக்கு, மத்திய, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் மணித்தியாலத்திற்கு 60 கிலோமீற்றர் வரையில் காற்று வீசக் கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
YOU MAY LIKE THIS
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |