இடியுடன் கூடிய மழை : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாட்டின் சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் இன்று (09) பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றதாக சிரேஸ்ட வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார்.
மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும்.
பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக் கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
பலத்த காற்று வீசக்கூடும்
நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் சீரான வானிலை காணப்படுவதுடன் மணித்தியாலத்திற்கு 15 ‐ 25 கிலோமீற்றர் வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து அல்லது மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும்.
புத்தளம் தொடக்கம் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான அத்துடன் காலி தொடக்கம் மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 40 ‐ 45 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.
சூரியன் உச்சம்
அத்துடன் வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல், சப்ரகமுவ,மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் மாத்தளை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் இன்று (09) அதிகரித்த வெப்பநிலை காணப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வின் காரணமாக இன்று மதியம் சுமார் 12.11 மணியளவில் உடப்பு, ஆட்டிகம, பிதிவில்ல, வக்காமுன, நுவரகல மற்றும் ஏறாவூர் போன்ற இடங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |