யாழ்ப்பாணத்தில் மற்றுமொரு கொவிட் மரணம் பதிவு
covid
jaffna
death
By Vanan
யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கொவிட் -19 நோயினால் உயிரிழந்துள்ளார்.
மீசாலையைச் சேர்ந்த 68 வயதுடைய முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பளை பிரதேச செயலகத்தில் அரச உத்தியோகத்தராகப் பணியாற்றும் அவரது மகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை அண்மையில் கண்டறியப்பட்டது.
இந்த நிலையில் அவரது தந்தை இன்று உயிரிழந்தார். அவரது சடலத்தில், மாதிரிகள் பெறப்பட்டு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொவிட் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது என்று சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்