டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..! இன்றைய நாணயமாற்று விகிதம்
இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (14) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 301 ரூபாய் 01 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 310 ரூபாய் 64 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 383 ரூபாய் 73 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 398 ரூபாய் 82 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
அவுஸ்ரேலிய டொலர்
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 327 ரூபாய் 83 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 341 ரூபாய் 50 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 222 ரூபாய் 39 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 231 ரூபாய் 78 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
அவுஸ்ரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 197 ரூபாய் 34 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 207 ரூபாய் 42 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 224 ரூபாய் 36 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 234 ரூபாய் 64 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
வங்கிகளில் இன்றைய நிலவரம்
அதேபோல் இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகளும் டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகளை வெளியிட்டுள்ளன.
அதன்படி மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 300.41 ரூபாயிலிருந்து 299.91 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 309.75 ரூபாயிலிருந்து 309.25 ரூபாயாகவும் குறைவடைந்துள்ளது.
கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 300.08 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 310.54 ரூபாயாகவும் காணப்படுகிறது.
சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகள் முறையே, 301 ரூபாய் மற்றும் 310.50 ரூபாயாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |