உக்ரைனுக்கு டோமாஹாக் ஏவுகணைகளை வழங்க தயாராகும் ட்ரம்ப்
Donald Trump
Russo-Ukrainian War
By Dharu
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் , உக்ரைனுக்கு டோமாஹாக் ஏவுகணைகளை வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதாக அவரது துணைத் தலைவர் ஜே.டி. வான்ஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து விசேடமாக பரிசீலித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் உக்ரைனுக்கான ட்ரம்பின் தூதர் கீத் கெல்லாக், ரஷ்யாவில் தாக்குதல் நடத்த உக்ரைனுக்கு அங்கீகாரம் இருப்பதாக தான் நம்புவதாக தெரிவித்துள்ளார்.
எண்ணெய் சுத்திகரிப்பு
ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை சேதப்படுத்த உக்ரைன் ஏற்கனவே நீண்ட தூர ட்ரோன்களைப் பயன்படுத்தியுள்ளது,
இதனால் ரஷ்யாவில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் ஆய்வளர்களால் கூறப்படுகிறது.
மேலும் குறித்த பிராந்தியங்களில் போர் என்பது ஒரு தொலைதூர தா்குதல் விடயமாக இருக்க வேண்டும் என்று இரு தரப்பும் கருதுவதாகவும் ஆய்வளர்களின் கருத்துக்களில் வெளிப்படுத்தப்படுகிறது.

3ம் ஆண்டு நினைவஞ்சலி
20ம் ஆண்டு நினைவஞ்சலி