ஐபிஎல்லில் அதிக தோல்விகளைச் சந்தித்த அணித்தலைவர் யார் தெரியுமா..!
இந்தியன் பிரீமியர் லீக் தொடரில்(ipl) அதிக தோல்விகளை சந்தித்த அணித்தலைவர்களில் முதலிடத்தில் எம்எஸ் தோனி (MS Dhoni) இடம் பிடித்துள்ளார்.
ஐபிஎல் தொடரை பொறுத்தவரையில் தோனி, ரோஹித் ஷர்மா இருவருமே சிறந்த அணித்தலைவர்களாக காணப்பட்டார்கள்.
இதற்கமையவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் தலா 5 முறைசாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளன.
அதிக தோல்வி
இந்நிலையில் இந்தியன் பிரீமியர் லீக் வரலாற்றில் அதிக தோல்விகளை சந்தித்த ஐபிஎல் அணித்தலைவர்களை பார்த்தோமானால் அதிலும் எம்எஸ் தோனி முதலிடத்தில் உள்ளார்.
இந்த பட்டியலானது ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும், உண்மையும் இதுவே.
அந்தவகையில் முதல் 5 இடங்களைப்பெற்ற அணித்தலைவர்களை பார்க்கலாம்.
எம்எஸ் தோனி
ஐபிஎல் வரலாற்றில் அதிக தோல்விகளுடன் முதலிடத்தில் எம்எஸ் தோனி உள்ளார்.
ஐந்து பட்டங்களை வென்றதோடு, சென்னை சூப்பர் கிங்ஸை (CSK) அதிக முறை ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு வழிநடத்தி, வெற்றிகரமான ஐபிஎல் அணித்தலைவராக கருதப்பட்டாலும் ஐபிஎல் வரலாற்றில் அதிக தோல்விகளை சந்தித்தவர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.
இவர் அணித்தலைவராக 226 போட்டிகளில் விளையாடி அதில் 91 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளார்.
விராட் கோலி
இரண்டாவது இடத்தில் விராட் கோலி உள்ளார்.
நட்சத்திர வீரரான இவர், அணித்தலைவராக 143 போட்டிகளில் விளையாடி அதில் 70 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளார்.
ரோஹித் சர்மா
மூன்றாவது இடத்தில் ரோஹித் சர்மா உள்ளார்.
இவர் அணித்தலைவராக 158 போட்டிகளில் விளையாடி அதில் 67 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளார்.
கௌதம் கம்பீர்
நான்காவது இடத்தில் கௌதம் கம்பீர் உள்ளார்.
இவர் அணித்தலைவராக 129 போட்டிகளில் விளையாடி அதில் 57 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளார்.
டேவிட் வார்னர்
ஐந்தாவது இடத்தில் டேவிட் வார்னர் உள்ளார்.
இவர் அணித்தலைவராக 83 போட்டிகளில் விளையாடி அதில் 41 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளார்.
இதில் உள்ள எந்தவொரு வீரருமே தற்போது அணித்தலைவராக இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |