பேரதிர்ஷ்டம் காத்திருக்கும் 5 ராசியினர் - வார ராசிபலன்
வாரத்திற்கான ராசி பலனை நாம் முன்னரே அறிந்து கொண்டு அதற்கேற்றாற் போல் முன்னெச்சரிக்கையாக சில செயல்களை திட்டமிட்டு மேற்கொள்ளும் போது நினைத்த காரியங்கள் வெற்றி பெறும்.
கிரக நிலைக்கு ஏற்ப ராசிபலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை சரியாக முடிவு செய்தால் வெற்றி நிச்சயமாகும்.
இந்நிலையில், திங்கள் முதல் வெள்ளி வரை எந்த ராசிக்காரர்களுக்கு அதிஷ்டம் கிட்டவுள்ளது என்பதை பார்க்கலாம்.
மேஷம்
குடும்பத்தில் உற்சாகமும் மகிழ்ச்சியுமான சூழ்நிலையே காணப்படும். பணவரவு திருப்தி தருவதாக இருக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபட நேரிட்டால் பெரியவர்களின் ஆலோசனையைக் கேட்டுச் செய்யவும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.

கணவன் - மனைவிக்கிடையே ஏற்பட்டி ருந்த கருத்துவேறுபாடுகள் மறைந்து அந்நியோன்யம் அதிகரிக்கும். தாயாரின் உடல்நலனில் கவனம் தேவை. தாய்வழி உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்படக் கூடும் என்றாலும் அதனால் பாதிப்பு இருக்காது.
வெளியூர்ப் பயணத்தின்போது எச்சரிக்கையாக இருக்கவும். புதிய வேலைக்கு முயற்சி செய்துகொண்டு இருப்பவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு அலுவலகச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். சில சலுகைகளும் கிடைக்கும்.
வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவுக்கு லாபம் கிடைக்காது. போட்டிகளைச் சமாளிக்க கடுமையாக உழைக்கவேண்டி வரும். புதிய முதலீடுகள் தவிர்க்கவும். பங்குதாரர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான வாரம் இது. கணவரின் அன்பும் ஆதரவும் உற்சாகம் தரும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும்.
கடக ராசி
அதிர்ஷ்டம் தரும் வாரமாக இருக்கும். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. சிலருக்கு வெளியூர்ப் பயணமும் அதனால் ஆதாயமும் ஏற்படும். திருமண வயதில் உள்ள மகன் அல்லது மகளின் திருமணம் தொடர்பான முயற்சிகள் சாதகமாக முடியும்.

வாழ்க்கைத்துணைவழி உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். பிள்ளைகளால் உறவினர்களிடம் மதிப்பு அதிகரிக்கும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தையிடன் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வழக்குகள் சாதகமாகும்.
அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். இருந்தாலும் அதற்கேற்ற சலுகைகள் கிடைப்பதால் உற்சாகமாகச் செயல்படுவீர்கள். அதிகாரிகள் அனுசரணையாக இருப்பார்கள். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வியாபாரத்தை விரிவுபடுத்தவும், வாடகை இடத்தில் இருந்து சொந்த இடத்துக்குக் கடையை மாற்றவும் வாய்ப்பு உண்டாகும்.
பங்குதாரர்கள் அனுகூலமாக இருப்பார்கள். சக வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்கள் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் பக்குவமாக நடந்து கொள்ளவும். புகுந்தவீட்டு உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சி தரும். அலுவலகம் செல்பவர்களுக்கு திருப்தி தரும் வாரம். சலுகைகளும் கிடைக்கும்.
மிதுன ராசி
சுறுசுறுப்பாகவும் பரபரப்பாகவும் செயல்படும் வாரமாக இருக்கும். நீங்கள் நீண்டநாள்களாக எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி வந்து சேரும். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவைப்படும். பணவரவு அதிகரிக்கும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படும்.

குடும்ப விஷ யத்தில் மற்றவர்கள் தலையிடுவதை அனுமதிக்காதீர்கள். சிலருக்கு நீண்டநாளாக நிறைவேற்றா மல் விடுபட்ட குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். பிள்ளை களால் பெருமையும் மகிழ்ச்சியும் உண்டாகும்.
அலுவலகத்தில் சுமுகமான சூழ்நிலையே காணப்படும். அதிகாரிகளின் ஆதரவால் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். சக ஊழியர்கள் தங்கள் பணிகளில் உங்கள் உதவியை நாடி வருவார்கள். சலுகைகள் கிடைக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்த நினைப்பவர்கள் அதற்கான முயற்சிகளைத் தொடங்கலாம்.
அனுகூல மாக முடியும். சக வியாபாரிகளுடன் இணக்கமான உறவு ஏற்படும். பணியாளர்களின் ஒத்துழைப் பால் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு செலவுகள் கூடுவதால் சற்று சிரமப்பட்டே சமாளிக்க வேண்டி வரும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். ஆனால், சலுகைகள் எதையும் எதிர்பார்க்கமுடியாது.
தனுசு ராசி
வருமானம் அதிகரிக்கும். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். திடீர் செலவுகளால் மனதில் சஞ்சலம் ஏற்படக்கூடும். மூன்றாவது நபர்களின் தலையீடு காரணமாகக் குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.

உறவினர்களுடன் கருத்துவேறுபாடு ஏற்படக்கூடும் என்பதால், பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். நண்பர்கள் தக்க தருணத்தில் உதவி செய்வார்கள். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும்.
உங்கள் வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்தவேண்டியது முக்கியம். பதவி உயர்வையோ ஊதிய உயர்வையோ தற்போது எதிர்பார்க்கமுடியாது. வியாபாரத்தில் சற்று கூடுதலாக உழைக்கவேண்டி வரும். பற்று வரவு சுமுகமாக நடக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
பங்குதாரர்களும் அனுசரணையாக நடந்து கொள்வார்கள். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு பிரச்னை இல்லாத வாரம். புகுந்தவீட்டு உறவினர்கள் அனுசரணையாக இருப்பார்கள். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு எதிர்பார்ப்புகள் ஓரளவு நிறைவேறும்.
மீன ராசி
எதிர்பார்த்ததைவிடவும் வருமானம் கூடுதலாகவே இருக்கும். கணவன் - மனைவிக்கிடையே ஏற் பட்டி ருந்த மனஸ்தாபம் நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணை பக்க பலமாக இருப்பார். பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.

சிலருக்கு அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது. சிலருக்கு வெளியூர்களில் இருக்கும் புகழ் பெற்ற புனிதத் தலங்களைத் தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். சகோதர வகையில் சுபச் செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
அலுவலகத்தில் உற்சாகமாக உங்கள் பணிகளைச் செய்வீர்கள். ஒரு சிலருக்கு இருக்கும் இடத்தில் இருந்து வேறு ஊருக்கு மாறுதல் கிடைக்கும். அதனால் நன்மையே நடக்கும். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகமாக வரும் என்றாலும் அதற்காக மிகவும் உழைக்கவேண்டி இருக்கும்.
வியாபாரத்தை விரிவுபடுத்தத் தேவையான வங்கிக் கடனுதவி கிடைக்கும். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மனதுக்கு நிம்மதி உண்டாகும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சலுகைகளும் கிடைக்கும்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |