விருது வென்றார் குட்டி சங்கா - சிறந்த துடுப்பாட்ட வீரராக துனித்
புனித ஆசீர்வாதப்பர் கல்லூரியின் விக்கெட் காக்கும் துடுப்பாட்ட வீரரான சாருஜன் சண்முகநாதன் ஆண்டின் சிறந்த விக்கெட் காப்பாளருக்கான விருதைத் தனதாக்கியுள்ளார்.
இம்முறை இடம்பெற்ற 44வது School Cricketers of the year’ நிகழ்வு BMICH இல் நேற்று (15) மாலை 5.15 மணிக்கு இடம்பெற்றிருந்தது.
பாடசாலை வீரர்களுக்காக விருது வழங்கும் தேசிய நிகழ்வான school cricketer of the year 2022 இல் சாருஜன் சிறந்த விக்கெட் காப்பாளருக்கான விருதைத் தனதாக்கியுள்ளார்.
சிறந்த துடுப்பாட்ட வீரராக துனித்
மேலும் இவர், இலங்கை கிரிக்கெட் ரசிகர்களால் குட்டி சங்கா என்று அழைக்கப்படுபவர்.
குறித்த நிகழ்வின் பிரதம அதிதியாக இலங்கையணியின் முன்னால் பிரபல துடுப்பாட்ட வீரர் அரவிந்த டி சில்வா கலந்து கொண்டார்.
மேலும், ஆண்டின் சிறந்த துடுப்பாட்ட வீரராக துனித் வெல்லலகேயும் ஆண்டின் சிறந்த துடுப்பாட்ட வீரராங்கணையாக கம்பஹா ரத்னாவலி பாலிக பாடசாலை மாணவி விஷ்மி குணரத்ன ஆகியோர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.