இலங்கையின் தற்போதைய நிலை துருவித் துருவி விசாரித்த சீன உயர்மட்டக்குழு
சீனாவின் சர்வதேச திணைக்களத்தின் பிரதி அமைச்சர் சன் ஹையன் தலைமையிலான சீனகொம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டக் குழுவொன்று, தேசிய மக்கள் சக்தியின் (NPP) தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவை இன்று ஜே.வி.பி.யின் தலைமையகத்தில் சந்தித்தது.
தூதுக்குழுவில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேசத் துறைத் தலைவர் லியு ஜியான்சாவோ மற்றும் இலங்கையில் உள்ள சீனத் தூதரகத்தின் அரசியல் ஆலோசகர் சென் சியாங் யுவான் ஆகியோர் அடங்கியிருந்தனர்.
இலங்கையில் தற்போதைய அரசியல் நிலவரங்கள்
இதன்போது இலங்கையில் தற்போதைய அரசியல் நிலவரங்கள் மற்றும் எதிர்வரும் தேர்தல்கள் தொடர்பிலும் அவர்கள் கலந்துரையாடினர்.
தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் பிரதிநிதிகள், தேர்தலுக்கான தமது கட்சியின் தயாரிப்பு மற்றும் நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து நாட்டை மீட்பதற்கு அரசியல் ஸ்திரத்தன்மையை உருவாக்க வேண்டியதன் அவசியம் குறித்து தூதுக்குழுவிற்கு விளக்கினர்.
இரண்டு வாரங்களில் மற்றுமொரு கோர சம்பவம் : புலம் பெயர்ந்தவர்களின் படகு கவிழ்ந்து 21 பேர் பலி பலர் மாயம்
இந்த கலந்துரையாடலில்
இக்கலந்துரையாடலில் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான விஜித ஹேரத், ஹரினி அமரசூரிய, மற்றும் உறுப்பினர்களான சுனில் ஹதுன்நெத்தி மற்றும் பேராசிரியர் அனில் ஜயந்த ஆகியோர் கலந்துகொண்டனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |