திடீரென தீப்பிடித்து எரிந்த கப்பல் : சுற்றுலா பயணிகளுக்கு நேர்ந்த அவலம்
சுற்றுலா பயணிகள் நூற்றுக்கும் மேற்பட்டோருடன் சூரத் தானி மாகாணத்தில் இருந்து கோ தாவோவுக்கு சென்ற படகு ஒன்று திடீரென தீப்பிடித்து எரித்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
தாய்லாந்தின் பிரபல கடற்கரை சுற்றுலா தலமாக கோ தாவோ விளங்குவதால் இங்கு உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழமையானதாகும்.
திடீரென தீ
இந்நிலையில்,சூரத் தானி மாகாணத்திலிருந்து 100-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கோ தாவோவுக்கு ஒரு படகில் சென்ற போது, அவர்கள் சென்ற படகு திடீரென தீப்பிடித்தது.
இதனால் அச்சமடைந்த சுற்றுலாப்பயணிகள் படகில் இருந்து கடலுக்குள் குதித்தனர்.
மீட்கும் பணி
இதனையடுத்து அங்கு விரைந்த கடலோர காவல்துறையினர் கடலில் தத்தளித்து கொண்டிருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதன்படி சுற்றுலா பயணிகள் அனைவரும் மீட்கப்பட்டு வேறு சில படகுகள் மூலம் கரைக்கு கொண்டு வரப்பட்டனர்.
இதன்மூலம் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இது தொடர்பான காட்சிகள் அங்குள்ள சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
யாழ் கடற்பரப்பில் உயிருடன் திருப்பி விடப்பட்ட 11 டொல்பின்கள்: கடற்றொழிலாளர்களுக்கு குவியும் பாராட்டு
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |