யானை தாக்கி வெளிநாட்டு சுற்றுலா பயணி பரிதாபகரமாக உயிரிழப்பு!
பொத்துவில் மணச்சேனை, கோமாரிய பிரதேசத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணியொருவர் யானை தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவமானது நேற்று (14) இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இத்தாலிய சுற்றுலாப் பயணியான 50 வயதுடைய ஜிஞ்சினோ பாலோ என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
கோமாரி பகுதியில் இரண்டு இத்தாலிய சுற்றுலாப் பயணிகள் மோட்டார் சைக்கிளில் சென்ற போது யானை தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்கள்.
இதன்போது, குறித்த சுற்றுலாப்பயணி காயமடைந்த நிலையில், 1990 அவசர நோயாளர் காவு வாகனம் மூலம் பொத்துவில் ஆதார வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது அங்கு உயிரிழந்துள்ளனர்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக அம்பாறை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் பொத்துவில் காவல் நிலைய பொறுப்பதிகாரி கமல் செனவிரத்ன மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |