வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப்பயணிகள் - விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை
வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை பிசிஆர் சோதனைகளுக்கு உட்படுத்தாவிட்டால், நாட்டில் மீண்டும் கொவிட் என்ற ஆபத்தான அலை எழலாம் என்று மருத்துவ நிபுணர்கள் குழு சுகாதார அமைச்சுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுகாதார அமைச்சின் சமீபத்திய வழிகாட்டுதல்களின்படி, இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தடுப்பூசி போட்ட சான்றிதழை சமர்ப்பித்த நிலையில் பிசிஆர் பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்டுள்ளனர்.
பிசிஆர் சோதனைகளாக தயாரிக்கப்பட்ட போலி ஆவணங்களை சமர்ப்பிப்பதன் மூலம் சில சுற்றுலா பயணிகள் நாட்டிற்குள் நுழையும் அபாயத்தை ஏற்படுத்தலாம் என்றும் இது மீண்டும் கொவிட் அலைக்கு வழிவகுக்கலாம் என்றும் மருத்துவ நிபுணர்கள் சுகாதார அமைச்சிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அவ்வாறான வாய்ப்பு ஏற்பட்டால் சுகாதார அமைச்சு பொறுப்பேற்க வேண்டும் என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.