ஜனாதிபதி தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணி யாருக்கு ஆதரவு : வெளியான அறிவிப்பு
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு (Sajith Premadasa) ஆதரவளிக்கவுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணி (TPA) அறிவித்துள்ளது.
கொழும்பில் (Colombo) இன்று (06)இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் (Mano Ganesan) இதனைத் தெரிவித்தார்.
இதேவேளை தமிழ் முற்போக்குக் கூட்டணியின் அரசியல் குழுவின் ஏகோபித்த தீர்மானத்திற்கு அமைய இம்முறை ஜனாதிபதி தேர்தலில் எமது ஆதரவையும் பூரண பங்களிப்பையும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு வழங்குவதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் என குறிப்பிட்டார்.
புரிந்துணர்வு ஒப்பந்தம்
எமது அரசியல் குழுவின் முடிவின்படி, ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளோம் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
ஜனநாயக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய காங்கிரஸ் மற்றும் மலையக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் தமிழ் முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஆனையிறவில் மகிந்த துவக்கிய அடையாள அழிப்பை அநுர தொடரும் முயற்சியா ! 6 மணி நேரம் முன்
