அக்கரைப்பற்றில் இலஞ்சம் பெற்ற காவல்துறை உத்தியோகஸ்தர் ஒருவர் சுற்றிவளைப்பு!
அக்கரைப்பற்றில் இலஞ்சம் பெற்ற காவல்துறை உத்தியோகஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அக்கரைப்பற்று காவல் நிலையத்தில் கடமையாற்றி வரும் போக்குவரத்து காவல்துறை உத்தியோகஸ்தர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று (26-03-2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
காவல்துறை உத்தியோகஸ்தர்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் அக்கரைப்பற்று பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற வீதி விபத்தொன்று தொடர்பில், நபர் ஒருவரிடம் நான்காயிரம் ரூபா இலஞ்சமாகக் கோரியுள்ளார்.
இதையடுத்து, குறித்த நபர் இலஞ்ச ஊழல் தடுப்புப் பிரிவிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

இதையடுத்து சம்பவ தினமான நேற்று காலையில் அக்கரைப்பற்று ஆராத வைத்தியசாலைக்கு முன்னால் இலஞ்ச ஒழிப்புப் பிரிவினர் மாறுவேடத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது அங்கு சென்ற போக்குவரத்து காவல்துறை உத்தியோகஸ்தர் இலஞ்சமாகப் பணத்தை வாங்கிக் கொண்டிருந்த போது அங்கிருந்த இலஞ்ச ஊழல் தடுப்புப் பிரிவினர் அவரைச் சுற்றிவளைத்துக் கைது செய்துள்ளனர்.
இந்தநிலையில், கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 2 நாட்கள் முன்