யாழ்ப்பாணத்தில் சிறுவனுக்கு நேர்ந்த துயரம்
யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறை காவல்துறை பிரிவுக்குட்பட்ட கொம்மாந்துறையில் உள்ள தோட்ட கிணறு ஒன்றில் குளிக்கச் சென்ற சிறுவனொருவன் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.
நிரேக்சன் என்ற 18 வயதான சிறுவனே இவ்வாறு உயிரிழந்தவனாவான்.
கிணற்றில் குளிக்கச் சென்ற சிறுவர்கள்
ஐந்து வரையான சிறுவர்கள் அப்பகுதியில் உள்ள தோட்ட கிணற்றில் குளிக்க சென்றுள்ளனர். இதன்போது அனைவரும் கயிறு கட்டி நீராடியுள்ளனர். அதன் பின்னர் அனைவரும் வெளியேறிய நிலையில் ஒரு சிறுவன் மாத்திரம் தொடர்ந்து நீராடியுள்ளான். அவனை வருமாறு ஏனையவர்கள் அழைத்துள்ளனர். குறித்த சிறுவன் சிறிது நேரத்திற்கு பிறகு வருவதாக கூறியுள்ளான்.

நீண்ட நேரமாகியும் குறித்த சிறுவனை காணாததால் ஏனையவர்கள் மீண்டும் அங்கு சென்று பார்த்த போது கயிறு அறுந்த நிலையில் அங்கு சிறுவனை காணவில்லை.
கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சிறுவன்
ஏனையோரின் உதவியுடன் தோட்ட கிணற்றில் தேடியபோது சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.

சடலம் தொடர்பான மரண விசாரணையை கரவெட்டி திடீர் மரண விசாரணை அதிகாரி வே.பாஸ்கரன் மேற்கொண்டார்.
உயிரிழந்த சிறுவனின் சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக வல்வெட்டித்துறை காவல்துறையினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |