நண்பர்களுடன் சேர்ந்து நீராடச் சென்ற மாணவனுக்கு நேர்ந்த துயரம்(படங்கள்)
Sri Lanka Police
Batticaloa
By Sumithiran
நண்பர்களுடன் நீராடச் சென்ற மாணவன்
நீராடச் சென்ற 16 வயது மாணவன் ஒருவன் நீரில் மூழ்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
வாழைச்சேனை காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி - மீராவோடை புளியடித்துறை ஆற்றில் இந்த சம்பவம் இன்று மாலை (29) இடம்பெற்றுள்ளது.
மீராவோடை அல் ஹிதாயா மகா வித்தியாலயத்தில் க.பொ.த சாதாரண தரத்தில் கல்வி கற்று வரும் எம்.எச்.அர்ஹம் எனும் மாணவன் நண்பர்களோடு சேர்ந்து நீராடும் போதே நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளார்.
சுழியோடிகள் தேடுதல்
நீரில் மூழ்கி மரணமடைந்த மாணவனை கல்குடா சுழியோடிகள் நீண்ட நேரமாக தேடி மீட்டெடுத்தனர்.
மாணவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 5 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்