பேருந்துடன் மோதுண்ட மோட்டார்சைக்கிள்! இளைஞனுக்கு ஏற்பட்ட துயரம்
Police
Sri Lanka
Nilaveli
By Vasanth
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்சொன்றும், மோட்டார் சைக்கில் ஒன்றும் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் திருகோணமலை நிலாவெளி கோபாலபுர வீதியில் இன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புல்மோட்டையிலிருந்து திருகோணமலைக்குச் சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் வண்டியில் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்ற நபர் மோதியதால் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்விபத்தில் 26 வயதுடைய இளைஞர் ஒருவரே படுகாயமடைந்துள்ளார். விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நிலாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி