சுற்றுலா வந்தவேளை நிகழ்ந்த அனர்த்தம்
கொக்கல பாலத்திற்கு அருகில் கடலில் நீராடச் சென்ற போது அலைகளில் அடித்துச் செல்லப்பட்ட மூவரில் இருவர் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும் ஹபராதுவ காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
எம்பிலிபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த கஹ்வல ஹர்ஷ ஹேமால் என்ற 35 வயதுடைய நபரே காணாமல் போயுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சுற்றுலாவிற்கு வந்து கடலில் நீராட

எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 35 பேர் கொண்ட குழுவொன்று பேருந்தில் சுற்றுலாவிற்கு வந்து கொக்கல பாலத்திற்கு அருகில் கடலில் நீராடச் சென்ற போது மூவர் அலைகளில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
தேடுதல் நடவடிக்கை

பின்னர் நீண்ட நேரத்தின் பின்னர் காவல்துறையினரும் பிரதேசவாசிகளும் இணைந்து இரண்டு பேரை மீட்டு கரைக்கு கொண்டு வந்து 1990 இலக்க அம்புலன்ஸ் வாகனத்தில் கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.
காணாமல் போன நபரைக் கண்டுபிடிக்க நீர்மூழ்கிக் குழுவினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.