பிரித்தானியாவில் காவல்துறை அதிகாரி மீது கொலை முயற்சி
பிரித்தானிய (United Kingdom) சிறைச்சாலை ஒன்றில் காவல்துறை அதிகாரி ஒருவர் மீது கொலை முயற்சி தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரித்தானியாவின் டர்ஹாம் (Durham) கவுண்டியில் உள்ள பிராங்க்லாண்ட் சிறையில் (Frankland Prison) கிரேட்டர் மான்செஸ்டர் காவல்துறை திணைக்களத்தின் அதிகாரி ஒருவரே சிறைக்கைதி ஒருவரால் தாக்கப்பட்டுள்ளார்.
கொலை முயற்சி
இதையடுத்து, வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட காவல்துறை அதிகாரி, தற்போது வீட்டிலிருந்து ஓய்வெடுத்து வருவதாக டர்ஹாம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தாக்குதல் மேற்கொண்ட சிறைக்கைதி மீது கொலை முயற்சி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
62 வயதுடைய டேவிட் டெய்லர் (David Taylor)என்ற சந்தேக நபரே தாக்குதல் மேற்கொண்டுள்ளதுடன் தற்போது காவலில் வைக்கப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |