புகையிரதத்தில் மோதுண்ட கப்ரக வாகனம்! சாரதி அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைப்பு
Puttalam
Sri Lanka Police Investigation
Accident
By Vanan
புத்தளம் பாலாவி சிமெந்து தொழிற்சாலையிலிருந்து அருவக்காட்டிற்குச் சென்ற புகையிரதத்தில் கப்ரக வாகனமொன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்து இன்று பிற்பகல் புத்தளம் தில்லையடி ரத்மல்யாய பகுதியில் இடம்பெற்றுள்ளது.
விபத்துக்குள்ளான கப் ரக வாகனத்தின் முன்பக்கம் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், வாகன சாரதி சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.
புகையிரத பாதுகாப்புக் கடவை இன்மை
குறித்த இடத்தில் புகையிரத பாதுகாப்புக் கடவை இல்லாமையினாலேயே குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை புத்தளம் போக்குவரத்து காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.


அநுர அரசாங்கத்தின் அமெரிக்க கனவு 13 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி