ரயில் விபத்தில் மூவர் பரிதாபமாக உயிரிழப்பு
accident
death
ajith rohana
By Shalini
நேற்று (18) மூன்று வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற ரயில் விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
பூசா மற்றும் கிங்தொட்ட இடையேயான ரயில் பாதையில் ரயிலில் மோதி 60 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளார்.
மேலும், புத்தளம் பகுதியில் இருந்து கொழும்புக்கு பயணித்த ரயில் மோதியதில் 71 வயது நபர் உயிரிழந்துள்ளார்.
மிஹிரிபென்ன பகுதியில் இடம்பெற்ற ரயில் விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த பெண் யார் என இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்று பிரதிப் பொலிஸ்மா அதிபர் கூறினார்.
ஹபராதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்