திடீரென பற்றி எரிந்த தொடருந்து - புத்தளத்தில் நடந்த சம்பவம் (படங்கள்)
Sri Lanka Railways
Accident
By pavan
புத்தளம் பாலாவியில் இருந்து அருவக்கல் சுண்ணாம்பு குவாரிக்கு சுண்ணாம்பு ஏற்றிச் சென்ற தொடருந்தின் இயந்திரம் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் புத்தளம் - குருநாகல் வீதி போக்குவரத்து கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் நிறுத்தப்பட்டதாக புத்தளம் தலைமையக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தொடருந்து திடீரென தீப்பிடித்ததாகவும் சாரதி உடனடியாக இயந்திரத்தை நிறுத்தியதால் சேதம் கட்டுப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
வாகன சாரதிகள் கடும் சிரமம்
புத்தளம் - குருநாகல் பாதையை தடை செய்யும் வகையில் புத்தளம் வைத்தியசாலைக்கு அருகில் தொடருந்து பெட்டிகள் நிறுத்தப்பட்டிருந்தன.
இதனால் பிரதான வீதியை பயன்படுத்தும் வாகன சாரதிகள் கடும் சிரமங்களை எதிர்நோக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி