மலையக தொடருந்து சேவைகள் பாதிப்பு
Sri Lanka Tourism
Sri Lanka Railways
Department of Railways
Railways
By Thulsi
கண்டியிலிருந்து பதுளையை நோக்கி புறப்பட்ட சரக்கு தொடருந்து ஒன்று நானுஓயா தொடருந்து நிலையத்திற்கு அருகில் தடம்புரண்டதில் மலையகத்திற்கான தொடருந்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
குறித்த தொடருந்து இன்று (15) அதிகாலை கண்டியிருந்து பதுளை நோக்கி புறப்பட்டுள்ளது.
இந்நிலையில் நானுஓயா தொடருந்து நிலையத்திற்கு அருகாமையில் காலை 10 மணியளவில் தடம்புரண்டுள்ளது.
வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பயணிகள்
இதனால் தொடருந்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. குறித்த தொடருந்தில் பதுளை நோக்கி பயணித்த வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பயணிகளும் சிரமங்களுக்குள்ளாகினர்.
அதனை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை தொடருந்து திருத்தக் குழுவினர் மேற்கொண்டு வருவதாக நானுஓயா தொடருந்து நிலையத்தின் கட்டுப்பாட்டு நிலைய அதிகாரியொருவர் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
1 வாரம் முன்
ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே…
2 வாரங்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்