தொடருந்து ஆசன முன்பதிவு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!
தொடருந்து ஆசன முன்பதிவு தொடர்பில் இலங்கை தொடருந்து திணைக்களம் முக்கிய அறிவுறுத்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, தொடருந்து ஆசன முன்பதிவின் போது பயணிகளின் தேசிய அடையாள அட்டை எண் அல்லது வெளிநாட்டு கடவுச்சீட்டு எண்ணைக் குறிப்பிட வேண்டும் என்று தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த விடயத்தை இலங்கை தொடருந்து திணைக்களம் வெளியிட்ட அறிக்கையிலேயே குறிப்பிட்டுள்ளது.
தொடருந்து பயணச்சீட்டு
அத்துடன், தொடருந்து நிலையத்திற்குள் நுழையும் போதும் தொடருந்தில் பயணச்சீட்டு பரிசோதனை செய்யும் போதும், பயணச்சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தேசிய அடையாள அட்டை எண் அல்லது வெளிநாட்டு கடவுச்சீட்டு எண்ணை சரிபார்த்து உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த 01 ஆம் திகதி முதல், முன்பதிவு செய்யப்பட்ட ஆசன பயணச் சீட்டுக்கான பணத்தை மீளளிப்பு செய்யக் கோரும் போது, பயணச் சீட்டில் குறிப்பிடப்பட்ட தேசிய அடையாள அட்டை எண் அல்லது வெளிநாட்டு கடவுச்சீட்டு எண்ணை உறுதி செய்ய, பயணியால் தொடர்புடைய தேசிய அடையாள அட்டை அல்லது வெளிநாட்டு கடவுச்சீட்டின் பிரதியானது தொடருந்து நிலையத்திற்கு சமர்ப்பிக்கப்படுவது கட்டயமானது எனவும் தொடருந்து திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |