சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் திடீர் இடமாற்றம்
சம்மாந்துறை நீதிமன்ற நீதிவானாக செயற்பட்டு வந்த ஜே.பீ ஏ.ரஞ்சித்குமார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அதன்படி, சம்மாந்துறை நீதிமன்ற புதிய நீதிவானாக நூர்டீன் முஹம்மட் சர்ஜுன் எதிர்வரும் திங்கட்கிழமை(5) நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில் பதவியேற்கவுள்ளார்.
கடந்த காலங்களில் களுவாஞ்சிக்குடி நீதிமன்ற நீதிவானாக செயற்பட்ட இவரது காலத்தில் நீதவான் நீதிமன்ற களஞ்சியசாலை பொருட்கள் மோசடி செய்யப்பட்ட சம்பவம் ஏற்பட்டிருந்ததுடன் நீதிமன்ற களஞ்சியசாலையில் இருந்த சான்றுப் பொருட்களை மோசடி செய்த குற்றச் சாட்டின் அடிப்படையில் அங்கு கடமையாற்றிய பதில் பதிவாளர் கைதான நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
மோசடி விசாரணை
இந்த நிலையில், நீதிமன்ற களஞ்சியசாலை பொருட்கள் மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளை தொடர்ந்து நீதிச்சேவை ஆணைக்குழு சம்மாந்துறை நீதிமன்ற நீதிவாக செயற்பட்டு வந்த ஜே.பீ ஏ.ரஞ்சித்குமாரை 2026.1.2 ந் திகதியன்று இடமாற்றம் செய்துள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்தை சேர்ந்த குறித்த நீதிவான் மட்டக்களப்பு மாவட்டத்தில் திருமணம் செய்துள்ளதுடன் களுவாஞ்சிக்குடி ,சம்மாந்துறை உள்ளிட்ட நீதிமன்றங்களில் நீதிவானாக கடமையாற்றி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |