வெனிசுலாவை நிலைகுலைய வைத்த அமெரிக்கா: நடத்தப்பட்ட அதிரடி தாக்குதல்
வெனிசுலாவில் அமெரிக்க இராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை அந்நாட்டின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவுக்கு போதைப்பொருள்களை கடத்தி உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாக வெனிசுவேலா ஜனாபதி நிகோலஸ் மதுரோ மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தார்.
திடீர் தாக்குதல்
இந்தநிலையில், வெனிசுலா மீது நேற்று (03) நள்ளிரவு திடீர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், வெனிசுவேலாவின் தலைநகர் கராகாஸ் உள்பட பல்வேறு பகுதிகளில் அமெரிக்கா வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது.

இதயடுத்து, அந்நாட்டு ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா ஃபுளோரஸ் ஆகியோரை அமெரிக்க படைகள் கைது செய்து நாடுகடத்தியதாக ட்ரம்ப் அறிவித்தார்.
இருப்பினும், மதுரோ மற்றும் அவரின் மனைவி உயிருடன் இருப்பதை வெனிசுலா அறிய விரும்புவதாக அந்நாட்டின் துணை ஜனாதிபதி அறிவித்திருந்தார்.
மதுரோ கைது
இதையடுத்து, மதுரோ கைது செய்யப்பட்டு கண்கள் மற்றும் காதுகள் மூடியவாறு அழைத்துச்செல்லப்படும் புகைப்படத்தையும் ட்ரம்ப் பகிர்ந்திருந்தார்.
இதன் பிறகே மதுரோ உயிருடன் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

நியூயார்க்கில் உள்ள ஸ்டீவர்ட் ஏர் நேஷனல் கார்டு தளத்தில் மதுரோவை கடத்திச்செல்லப்பட்ட விமானம் தரையிறக்கப்பட்டது.
இதையடுத்து, மதுரோயும் அவரின் மனைவியும் புரூக்ளின் சிறையில் அடைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |