ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு நீதிமன்றின் அதிரடி உத்தரவு
புதிய இணைப்பு
சதோச வாகனத்தை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இளைய மகன் ஆகியோர் ஜனவரி 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்
மூன்றாம் இணைப்பு
நிதி மோசடி விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இளைய மகன் ஆகியோர் வத்தளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று காலை நிதி மோசடி விசாரணை பிரிவில் முன்னிலையான போதே, முன்னாள் அமைச்சரும் அவரது மகனும் அப்பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இரண்டாம் இணைப்பு
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினால் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறி ஒன்றைத் தவறாகப் பயன்படுத்தி அரசாங்கத்திற்கு நிதி இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக அவர் நிதிக் குற்ற விசாரணை பிரிவுக்கு இன்று முனினலையாகி இருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, முன்னாள் அமைச்சருடன் அவரது இளைய மகனும் கைது செய்யப்பட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் இன்று (5) காலை முன்னிலையாகியுள்ளார்.
சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறி ஒன்றைத் தவறாகப் பயன்படுத்தி அரசாங்கத்திற்கு நிதி இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக அவர் நிதிக் குற்ற விசாரணை பிரிவுக்கு இன்று அழைக்கப்பட்டுள்ளார்.
அதற்கமையவே முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்றைய தினம்நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.
விளக்கமறியல் உத்தரவு
இதேவேளை, நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (FCID) முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன், ஜொஹான் பெர்னாண்டோ கடந்த வாரம் கைது செய்யப்பட்டிருந்தார்.

அதன்படி, அவரை எதிர்வரும் 2026 ஜனவரி 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வத்தளை நீதிவான் நீதிமன்றம் கடந்த (31) உத்தரவு பிறப்பித்தது.
அத்துடன், சதொச நிறுவனத்தின் போக்குவரத்து பிரிவுக்கான முன்னாள் முகாமையாளர் கைது செய்யப்பட்டதுடன், நீதவானின் உத்தரவாதத்துக்கு அமைய அவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தகக்து.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |